உணர்த்துக்கொள் -சகி
@@உணர்த்துக்கொள் @@
நீ அறிவாயோ ?
இல்லை உணர்வாயோ ?
இல்லை இல்லை அறிந்தும்
அறியாமல் போவாயோ ?
இல்லை
உணர்ந்தும் உணராமல்
போவாயோ ?
உதிர்த்திடும் வார்த்தைகளை
சேகரிக்கும் முன் சற்று யோசி ...
ஒரு நொடியாவது
சிந்திக்கவாயினும் கற்றுக்கொள் ...
உன் வார்த்தைகளின் மதிப்பும்
வலிமையும் என்னவென்று ....
பிறர் மனதை தாக்கும்
வார்த்தைகளை கொண்டு
கொல்லாதே....
துடிக்கும் இதயம்
துடிப்பதையும் நிறுத்திவிடும்....