நல்ல வேளை

நல்ல வேளை.

நல்ல வேளை காந்தியாரை
கண்டு கொண்டோமோ!.
இல்லை யெனில் நாடு என்ன
ஆகும் கண்டமோ!!

அள்ளிக் கொள்ளை தானேன்னு
அடித்திருப்பாரோ!-ஐயோ
கொள்ளிக் குடம் அந்நாளே
உடைத் திருப்பாரோ!

சரியான நேரம் அவரை
கண்டு கொண்டாமோ!--பூமி
சரித்திரத்தில் இந்தியாவை
வென்றெடுத்தோமோ!

நிரந்தரமாய் இந்தியாவும்
நிலைத்திருக்கவே—தர்மம்
நிறை குடியரசை படேல்
தெரிந்தெடுத்தாரே.

நினைக்கும் பொழுதே நெஞ்சம்
எல்லாம் பதற்றமாகுதே!--கொஞ்சம்
இந்தியரும் அசந்திருந்தால்
என்ன கதி நேர்ந்திருக்குமோ!

விசக்கிரிமி பரவி மோசம்
ஆகிருப்போமோ!-–ஐயோ
விடியாத இருளுக்குள்ளே
துடித்திருப்போமோ!

விடிஞ்சதையும் அடைஞ்சு போக
ஊதிப் பாத்தாங்க--கதை
முடிஞ்சாருன்னு பழையபடி
நுழைய வந்தாங்க.

நேரு யாரு காந்தியாரு
தேர்ந்த பேருங்க—நாட்டை
தெய்வம் போல கூட்டியொண்ணா
சேர்த்து வைத்தாரே.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (13-Dec-14, 10:32 pm)
பார்வை : 90

மேலே