என் ஒப்பில்லா ஓவியமே
என் வாழ்கை எனும் வனம் தனில்
வண்ணமாய் , வாசமாய் ,
வசந்தமாய் வந்த வாசமலர் நீ
பலநேரம் பாரிவள்ளலாய்
பாசம் ,பரிவு
இன்பம்,இனிமை என
வாரி வழங்கிய சுவாச மலர் நீ
சிலநேரம் சிறு கருமியை போல்
சீற்றம்,சிறுபிள்ளைத்தனம் ,
வலியும் வேதனையும்
சிறிதாய் எனக்காய் செலவிட்ட சிறு மௌவல் நீ
இப்படியாய் உன் நினைவு ஒவ்வொன்றையும்
ஒப்பீட்டோடு ஒப்பிட்டு ஒப்பிக்க
ஒருவகையில் ஒப்பம் தான் எனக்கு
-இருந்தும்
உலக பூக்களின் ஒட்டுமொத்தமும்
போதாதே உன்னோடு ஒப்பிட ....
என்பதால் இத்தோடு நிறுத்துகிறேன்
என் ஒப்பில்லா ஓவியமே ! ....