மாறும் கவிதை

ஆரம்ப காலத்தில் ஐந்தாறு வார்த்தை யிலும்
ஓரு வரியிலும் அடங்கா கருத்துக்கள் பிதுங்க
எதுகையும் மோனையும் எதிர் நோக்கிச் செல்ல
கருத்துக்கள் பிழன்று தனி வட்டம் போட - பயிற்சியால்

சின்ன சின்ன சொல்
சிலீர் வட்டம் அடிக்க
சிக்கன மாய் வரிகள்
சீர் பெற்று அமைய

எதுகை உடன் மோனை
இருகை உடன் சேர
கவிதை என வடிவு
அமுதை மனம் அள்ள

பல சொல் வேணா
ஒரு சொல் போதும்
கவி இனிக்க வெனில்
தமிழ்

ஒ ரெழுத்தே எனில்
தமிழ் பழகிய
நா

-- முரளி

எழுதியவர் : முரளி (14-Dec-14, 3:39 pm)
Tanglish : maarum kavithai
பார்வை : 163

மேலே