மகரந்தம்

திருமணம் முடித்து
ஒருவன் கைபிடித்து
செல்லும் வரை
எங்கள் வயிற்றில்
நெருப்பின்
சிவந்த ஜ்வாலை
என்று பெற்றோர்

அவளை கரைசேர்த்து
பின்னர் தான் எனக்கு
யோசிக்க முடியும்
என்று அரபிக்கடலின்
மறு கரையிலிருந்து
நீல அலைகளிடம்
சொல்லி மனதாரும்
அண்ணன்மார்

நல்ல குணம்
படிப்பு புது நிறம்
களையான முகம்
வேலைக்கும்
போறா என்னமோ
கல்யாணம் தள்ளுது
பச்சையாக காது
பட பேசும்
அக்கம்பக்கத்தார்

காப்பி குடிக்கலாமா
பைக்கில் ட்ராப்
செய்யட்டுமா ஏன்
நேத்து போன் ஆப்
பண்ணிடிங்க நான்
மெசேஜ் பண்ணி
பண்ணி பதிலில்லை
என்றும் வெள்ளை
பற்கள் அதிகம்
தெரியும் அலுவலக
ஆண் நண்பர்கள்

நேத்து எங்க
வீட்ல என்ன
நடந்தது தெரியுமா
இன்னும் நாலு நாள்
தலைவலி மாத்திரை
போடணும் போல
இருக்கு பேசாம
கல்யாணம் பண்ணாம
காதலர்கள் ஆகவே
காலம் கடத்தணும்
என்று பழுப்பு
நிறத்தில் குழப்பும்
பெண் நண்பர்கள்

இவர்கள் மத்தியில்
ப்ராப்தம் என்பதா
பகவான் ஆசி என்பதா
நல்ல நேரம் காலத்தில்
ஆண்மகன் அறிமுகமா
கைபிடித்தேன் அருகில்
அமர்ந்தேன் மனவடையில்
என் முகமும் மனமும்
ஜொலிக்குது வானவில்
வர்ணங்கள் தெளிக்குது
ஆணை உடைத்து என்
என்ன பெருக்கில்
இன்ன வர்ணம்
என்று பிரித்து பார்க்க
முடியாத படி
என் மணக்கோலம்

எழுதியவர் : கார்முகில் (14-Dec-14, 6:39 pm)
சேர்த்தது : karmugil
Tanglish : magarantham
பார்வை : 126

மேலே