காலம் மாறிப்போச்சு
என்னை உனக்கு புடிக்குமா?
புடிக்கும் என்றல் சொல்லிவிடு
புதிர் விளையாட்டு வேண்டாமடி
பெண்ணே!
சொல்ல முடிய வில்லை என்றாலும்
எழுதியாவது தந்துவிடு
நான் துள்ளி வருகையில்
தள்ளிச் செல்லாதே
பெண்ணே!
புலம்புவேன் என்று நினைக்காதே
சரி தான் போடி னு
கெளம்புவேன்.
அழுவேன் என்று நினைக்காதே
உன்னை கை கழுவுவேன்
நான் கோளை அல்ல
மீசை உள்ள காளையடி
கொம்பு இல்லை என்றாலும்
தெம்பு இருக்கு டி பெண்ணே
வம்பு செய்ய மாட்டேன்
வழி விட்டுச் செல்வேன்
விழி இரண்டைக் கொடுத்த கடவுள்
வழி சொல்லாமலா போகும்
புதைந்து விடமாட்டேன்
புறப்பட்டு விட்டேன்
புதையலைத் தேடி ..