சுகமான கற்பனைகள்

மங்கை மகள் நான் காத்திருக்கேன்
எங்க மாமனைக் கை அணைக்கக்
காத்திருக்கேன்.......

நான் கரம் கொண்டு அணைக்கும்
வேளையிலே மாமன் தன்னை மறந்து
கண் உறங்க வேண்டும் பஞ்சணையிலே ...

விட்டில் பூச்சி விழுந்து மாமன்
உடல் எச்சில் படாமல் விளக்கின்
ஒளியை மங்கலாகவைத்து
மங்கை நான் பக்கம் இருப்பேன்.....

ஏற்றி வைத்த கொடிபோல பட பட
என்று அடிக்கின்றது மனசு இறக்கி
வைத்த நிறை குடம் போல தழும்புது
என் வயசு......

விண்ணில் இருந்து வரும் மழைத் துளி
தாமரை இலைமீது விழுந்து தெறிப்பது
போல் வந்து என் நெஞ்சின் மேல்
விழுந்து தெறிக்கின்றது உடல் எங்கும்
என் மாமன் மேல் உள்ள ஆசை.......

கொண்டை மேலே நான் முடிந்த
மலரும் மாமன் மார்பின் மேலே
விழவேண்டும் தினமும்.......

அதிகாலையிலே நான் பார்க்க
வேண்டும் மாமன் முகம் முதலில்
என் வெட்டும் விழி எடுக்கவேண்டும்
படம் விழியின் உள்ளே வெட்டுக்கிளி
போல் துள்ள வேண்டும் அவர் நிழல்.....

மார்கழி குளிரினிலே என் மாமன்
மார்பின் மேல் உறங்கையிலே குளிர்
பறக்க வேண்டும் மாமன் மூச்சுக் காற்றின்
சூட்டினிலே.........

தவளையாட்டம் துள்ளுது இளமை
பாம்பாட்டம் ஊர்து வெட்கம்
இன்னும் எத்தனை நாளைக்குத்தான்
நீடிக்குமோ என் மாமன் மேல் உள்ள
நோட்டம்...........

மாமன் அயல் நாடு ஓட்டம் காணும்
முன்பே கட்ட வைக்க வேண்டும்
கழுத்தில் தாலி.......

என் காதல் வாட்டம் காணும் முன்பே
கை சேர்க்க வேண்டும் காலம்......

வர இருக்கும் அந்த இன்ப நாளை
நினைக்கையிலே இன்று எனக்கு
வெட்கம் வெட்கமாக வருகின்றதே
என்னை விட்டுக் கொஞ்சம் விலகி
நில்லாயோ கற்பனையே........

எழுதியவர் : தழிழ்த்தேனீ இ.சாந்தகலா (14-Dec-14, 8:05 pm)
பார்வை : 356

மேலே