போங்கடா போங்க

மதவெறி புயல் ஒன்று
மையம் கொண்டது மத்தியில்

இந்திய தேசம் இது
'இந்து தேசம்' என்ற வாதம் வலுவாய்

புனித கங்கைக்கு கலங்கமாம்;
புதுப்பிக்க தெண்டமாய் பல ஆயிரம் கோடி
கேடிகளே நில்!
எங்கள் குளங்களை தூர்வாறு.

வழக்கொழிந்த மொழிக்கு வாழ்வு வேண்டுமாம்;
சமஸ்கிருத வாரம் தேவையாம்;
'தேவ பாஷை' தொண்டர்களே !
எங்கள் இனமொழி காக்க விடு

தேசிய நூல் 'பகவத் கீதையாம்'
சரி தானே!என் மத நூல் இது தானே !
'இந்து' நான் என்றால்
உன் பிறப்பின் வரலாறு கேள் ! கீதையிடம்
அது கேவலம்
நான்கு வர்ணங்களில் நீ
எப்படி பிறந்தவன் என போய் பார்
நான் சொன்னால் நா கூசும்

தூணிலும் ,துரும்பிலும் இருப்பவனாம் ;
கோவில் மட்டும், அயோத்தி தான் வேண்டுமாம்;
அதுவும் அந்த இடத்தில் தான் வேண்டுமாம்
மூன்றரை லட்சம் பேர் காவு கொண்டு
இன்னும் தேவையாம் 'ராம ராஜ்ஜியம்'

ஜோதிடம், வானியல் அறிவியலாம்
பாட திட்டத்தில் வேண்டுமாம் முக்கிய பாடமாய்
மூட நம்பிக்கை தூபம் இட்டு
மந்தையாய் மக்களை அலைய விட்டு
சிந்திக்க விடாமல் சீரழிக்கும் முயற்சியாய்.............

தாய் மதத்திற்கு திரும்ப வாய்ப்பாய்;
கட்டாய இந்து மத மாற்றமாய் ;
மத சார்பற்ற இந்திய அரசியல் அமைப்பு
சட்டத்திற்கு சவாலாய்;

எத்தனை,எத்தனை திணிப்புகள்
அத்தனையும் மீட்டெடுப்பு பணிகள்
இந்து மத மீட்பு அல்ல;
'மனு தர்ம'மீட்பு

100 க்கு 3 ல் 97 அடங்கும் எனில்
ஓங்கி ஒலிக்க போவது இந்து மதமல்ல ;
'வர்ணாசிரமமே'

'மனதின் பேச்சு' ஒன்றுமாய்
மனதில் ஒன்றுமாய்
'காவி காடாய்' மாற்றும் முயற்சியாய்;

உணர்வோடு விளையாடி
மத போதை மதுவேற்றி ;
கிறுக்கு ஆட்டம் ஆட வைக்கும் கும்பல்
வெறி ஆட்டம் போடும் மத வெறி நாய்களின் ஓட்டம்
விரைந்து வரும்
மக்களின் போதை தெளிந்து புத்தி வரும்;
புது புரட்சி வரும்
பாசிசம் முடிவு பெரும் நாள் வரும்.

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (16-Dec-14, 12:01 pm)
பார்வை : 190

மேலே