சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 22 ஈ வஸு த நீவண்டி – ராகம் சஹாந

'சஹாந' என்ற ராகத்தில் அமைந்த 'ஈ வஸு த நீவண்டி' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.

பொருளுரை:

இவ்வுலகில் உன்னைப் போன்ற தெய்வத்தை எங்கே காண்பேன்?

நலம் புரிந்து அனைத்தையும் வளரச் செய்யும் கோவூர் வாழ் சுந்தரேசுவரனே! சிவனே!

ஆசையுடன் அரை நிமிடமாவது உனது தலத்தில் வாசம் செய்பவர்களின் மனக் கவலைகள் அனைத்தையும் அகற்றிச் செல்வத்தையும், நீண்ட ஆயுளையும், அந்தணரிடம் பக்தியையும், பிரகாசத்தையும் அருளி உலகில் புகழ் பெறச் செய்பவனே! அடியார்க்கு வரந்தருபவனே! இத்தியாகராஜன் இதயத்தில் வசிப்பவனே! சித் ஸ்வரூபனே! சுந்தரேசனே!

பல்லவி:

ஈ வஸு த நீவண்டி தை வமு நெந்து கா நரா (ஈ)

அனுபல்லவி:

பா வுகமு க ல்கி வர்தி ல்லு
கோவூரி ஸுந்த ரேச கி ரீச (ஈ)

சரணம்:

ஆஸசே யரநிமிஷமு நீ புர
வாஸ மொநர ஜேயுவாரி மதி
வேஸட லெல்லநு தொ லகி ஞ்சி த ந
ராஸுல நாயுவுநு
பூ ஸுர ப க்தியு தேஜமு நொஸகி
பு வநமந்து கீ ர்த்தி க ல்க ஜேஸெ
தா ஸவர த த்யாக ராஜ ஹ்ருத ய நி
வாஸ சித் விலாஸ ஸுந்த ரேச (ஈ)

குறிப்பு:

கோவூர் ஈஸ்வரன் சுந்தரேசுவரனைக் குறித்த ஐந்து கீர்த்தனைகளுள் ஒன்று.

ee vasudha ni sahana by Sanjay Subrahmanyan at Newcastle UK, 06-03-2016 என்று வலைத்தளத்தில் பதிவு செய்து சஞ்சய் சுப்பிரமணியன் பாடுவதைக் கேட்கலாம்.

I vasudhA - sAhana - Adi - tyAgarAja என்று வலைத்தளத்தில் பதிவு செய்து R.K.ஸ்ரீகண்டன் பாடுவதைக் கேட்கலாம். உடன் பாடுபவர் R.S.ராம்காந்த்.

Thyagaraja Krithis by TM Krishna | Jukebox என்று வலைத்தளத்தில் பதிவு செய்து இப்பாடலைக் கேட்கலாம்.

Ee Vasudha - Sahana என்று வலைத்தளத்தில் பதிந்தால் S.Hariharan என்ற குரலிசைக் கலைஞர் இப்பாடலைப் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Dec-14, 10:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 89

மேலே