தமிழ் வாழ வேண்டுமாம்
மொழிகளில் சிறந்த மொழி தமிழ் மொழி என சொல்லபடுகின்றதேத் தவிர நடைமுறையில் தமிழ்மொழி வாழ்வதே இல்லை."தமிழ் வாழ்க" என்று கொட்ட எழுத்தில் எழுதிவைத்தால் மட்டும் போதாது."தமிழன் வாழ்க" என்றும் எழுதிவைத்தால் மட்டும் போதாது. தமிழும் வாழ தமிழனும் வாழ தமிழை தடை இன்றி பேசத் தெரிந்தத் தமிழன் முதலில் லஞ்சம் வாங்குவதை நிறுத்த வேண்டும். அடுத்தத் தமிழனை மாட்டி விட்டு தான் மட்டும் தப்பிக்கும் புத்தியினை திருத்திக்கொள்ள வேண்டும். பிற மாநிலங்களில் தமிழன் சென்றால் அங்கே தமிழ் மொழியைத் தவிர அந்தந்த மாநில மொழிகள் அந்தந்த மாநில மக்களை அறிய முடிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் பிற மாநில மொழி பேசுபவர்கள் வந்தால் அவர்களுக்கேற்றவாறு தமிழன் மொழிப் பேசி "தன்மானத்தை" விலைப் பேசுகின்றான். அவர்கள் தரும் காசுக்காக தமிழ் மொழியில் பேச இவன் வெட்கப்படுகின்றான். தமிழன் தமிழில் பேசினாலும் பிற மாநிலத்தவர்கள் ஏளனமாகப் பார்க்கின்றார்கள். அவர்கள் ஏளனமாகப் பார்ப்பதால் இவன் தமிழை ஏளனமாகக் கருதுகின்றான். பிற மொழிகளுக்கு வழி வகுக்கும் மொழி தமிழ் என்பதை தமிழன் மறந்துவிடுகின்றான். பிற மாநிலங்களில் தமிழன் சென்றால் அங்கு தமிழன் தத்தளிக்கின்றான். காரணம் தமிழன் அங்கு காணும் மொழிபேசும் மனிதர்களின் மொழியின் மோகத்தால் பிற மொழிகளைக் கற்க தமிழன் தமிழ் நாட்டில் பயிற்சி எடுக்கின்றான். ஆனால் பிற மொழி பேசுபவர்கள் அவர்கள் மாநிலத்தில் தமிழ் மொழிக் கற்க பயிற்சி எடுப்பதில்லை. தமிழனிடம் தன்மானம் இருந்தாலும் தமிழன் தன்மானத்தை தவறான வழிகளில் விற்றுவிடுகின்றான். அதாவது லஞ்சம் வாங்குவதிலும், பொய் உரைப்பதிலும். பழி வாங்குவதிலும் தமிழைக் கடைப்பிடிக்கின்றான். இதற்குத்தான் தமிழன் தமிழைப் பயன்படுத்துகின்றான். அரசுத்துறை நிறுவனங்களில் தமிழை அதிக அளவில் எழுதுவதர்க்குக் கூட மதிப்பைத் தருவதில்லை. மேலும் அரசியல்வாதிகளின் கைப் பாவையாக தமிழன் விளங்குவதால் தமிழக அரசு நிறுவனங்களில் தமிழனை வாழவிடுவதில்லை. தமிழன் ஆயுதமாக ஏந்துவது "சாதி" எனும் கத்தியை. அரசு நிறுவனங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தாழ்ந்த இனத்தவர்கள் பணியாற்றும்போது நிர்வாத்தின் மீது அக்கறைக் கொள்வதில்லை. மாறாக அரசுக்கே துரோகம் செய்யும் செயலில் ஈடுபட்டு விடுகிறார்கள். பொய்யானவைகளை உண்மையாக்கி தன்னை உத்தமனைப் போல் காட்டிக் கொள்கிறார்கள். இதனையே அரசு நிறுவன உயர் அதிகாரிகள் உண்மைக்குச் சான்றாகக் கருதி தவறான தண்டனைகளை தமிழனுக்கு அளித்துவிடுகிறார்கள். உண்மைக்கு மாறானவைகளை உண்மைதான் என முத்திரை இட்டு தமிழையே களங்கப்படுத்தி விடுகிறார்கள். மேலும் ஒரு சான்றினை கூறவேண்டுமாயின் அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்குகின்ற தமிழக அரசின் மாண்புமிகு முதல்வரின் பிரிவில் அளிக்கப்படுகின்ற மனுக்கள் கிழிக்கப்பட்டு பதில் அறிக்கைத் தராமல் தமிழக அரசையே உதாசீனம் செய்யும் கேடு கெட்ட அரசு ஊழியர்கள் பல்வேறு நிறுவனங்களில் பதவி உயர்வுப் பெற்று மென்மேலும் தவறு இழைக்கவும், கூடுதலாக சம்பளம் பெறவும் சாதி அடிப்படையில், பணிக் காலத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மனசாட்சி இல்லாமால் ஊதாரித்தனமாக அரசிடமிருந்து மாதந்தோறும் சம்பளம் பெறுகிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கின்றது. இப்படி இருக்கும் போது தமிழ் தமிழ் நாட்டில் எப்படி வாழும். இந்திய அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 இன் கீழ் தகவல் வழங்கக் கேட்டுக் கொண்ட ஒரு மனுதாரரை ஈவு இரக்கம் இல்லாமல் கூலி ஆட்களை ஏவி கொன்றும் விட்டார்கள். இது தமிழ் நாட்டில் தான் நடந்துள்ளது. கொலையுண்ட மனுதாரர் தகுந்த ஆதாரங்கள் வைத்திருந்த போதும் அந்த ஆதாரங்களை பொய்யாக்கி உண்மை ஆதாரங்களையும் மனுதாரரையும் உயர் அதிகாரியின் துணையோடு பச்சத் தமிழனை பச்சத் தமிழன் கொன்றுவிட்டான். எப்படி தமிழ் வாழும். எப்படி தமிழன் தலை நிமிர்ந்து வாழ்வான். இந்திய அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட அந்த சட்டத்தால் அவனுக்கு இந்தத் தீர்வா? தமிழ் நாட்டில் போலிகள் ஏராளம். அந்தப் போலிகள் பயன்படுத்தும் மொழி தமிழ். வெட்கமாக இருக்கிறதல்லவா. வேதனையாக இருக்கிறதல்லவா. கிரேக்க,லத்தீன்,மொழிகள் நாளடைவில் அழிந்ததைப் போல் தமிழும் தமிழனால் நாளடைவில் அழிந்துப் போகும் என்பது தமிழனின் இந்த கேடுக் கெட்ட செயலால் நன்றாக தெரிகிறது. மேலும் தமிழன் ஆன்மிகம் என்ற போர்வையில் நெற்றி நிறைய திருநீர் இட்டு வாய் நிறைய பொய்யைப் பேசி தமிழ் நாட்டில் வலம் வருகின்றான். அஞ்சாமல் ஒரு உயிரைக் கொன்று விட்டு ஐயப்பனுக்கு மாலை இட்டு விரதம் இருந்து ஆண்டுதோறும் ஆன்மீக யாத்திரையை தமிழன் கடைப் பிடிக்கின்றான். அரசன் அன்றேக் கொல்வான். தெய்வம் நின்றுக் கொல்லும் என்ற முதுமொழியை மறந்து தமிழன் தலைவிரித்து ஆடுகின்றான். தமிழனின் தலைத் தாழ்ந்த இச்செயலால் தமிழ் வாழ வேண்டுமா? அல்லது தமிழ் வாழ தமிழனை எந்தத் தமிழன் திருத்துவான்.? தமிழ்மொழி என்பது உயிரைப் போன்றது. உயிரைத் துறந்த உடல் மண்ணிலும், நெருப்பிலும் காணாமல் போவதைப் போல் தமிழ் மொழியின் உயிரை தமிழன் புதைக்கப் பார்க்கின்றான். அது அவனையே புதைத்துவிடும் என்பதை மறந்து தமிழன் தமிழை கையாளு- கின்றான். தமிழ் வாழவழி இருந்தால் எவரேனும் சொல்லுங்களேன். மாண்டாலும் மறையாத பாரதியே,. பாரதிதாசனே,மு,வாவே,உ.வே.சாமினாதரே.தமிழ் மொழி சாகாவரம் பெற வைத்த இலக்கியப் புரவலர்களே, எங்கே தூயத் தமிழன்.அவனை அறிமுகப்படுத்துங்கள். தமிழ் வாழட்டும்.அவனால் தமிழனும் வாழட்டும்.