குழந்தைகள் என்னடா பாவம் செய்தனர்
காலையில் பாகிஸ்தான் பள்ளியில் தலிபான்கள் தாக்கியதில் 100க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்த செய்தி உலகம் முழுக்க பரபரப்பாக பேசபடுகிறது. கேட்ட உடனே நமக்கு குலை நடுங்குகிறது.
தீவிரவாதம் ஒரு மனிததன்மையற்ற செயல். நெஞ்சை உடையச்செயும் இச்செயல் மிருகத்தினும் ஈனப்பிறவி செய்யும் செயல். எதற்காக கொல்லப்பட்டோம் என்று அறியாத அந்த பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்?
யார் இந்த மனித வெறி பிடித்தவர்கள்? இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஒவ்வொரு முறை இவர்கள் செய்யும் படு கொலைக்கு பலியாவது மனிதர்களின் உடல்கள் மட்டும் அல்ல மகத்தான ஒரு மார்க்கத்தின் மானமும் மரியாதையும்தான்.
வெறி ஊட்டப்பட்ட இந்த மிருகங்கள் நாளை மறுமையில் என பதில் சொல்ல போகின்றன? ஒரு மனிதனை கொன்றவன் உலகில் உள்ள அணைத்து மனிதர்களையும் கொன்றவனாவான், கொலை செய்வது மிகப்பெரிய பாவம் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், துறவிகள் ஆகியோரை கொள்ள கூடாது . வயல் நிலங்களை, மரங்களை, கால்நடைகளை கூட போர் களத்தில் கொள்ளயிட கூடாது என்றெல்லாம் குர்ஆனிலும், நபிமொழியிலும் நிறைய வழிகாட்டுதல்கள் உள்ளன.
முகமூடிக் கொள்ளையர்கள் போன்ற தலிபான் பயங்கரவாதிகள் காட்டுமிராண்டிதனத்திர்க்கும் இஸ்லாத்தின் திரு நெரிக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை. மனிதனாக கூட தகுதி அற்ற இந்த மிருகங்களுக்கு முஸ்லிமாக இருபதற்கு எந்த தகுதியும் இல்லை.
இந்த பயங்கரவாதிகளிடம் நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்;
அல்லாஹ்வின் மார்க்கத்தை தயவு செய்து அவமானபடுத்தாதீர்கள்.
ஒரு முஸ்லிம் தீவிரவாதியாக இருக்க முடியாது தீவிரவாதி முஸ்லிமாக இருக்க முடியாது!
முஹம்மது ரபிக்
சென்னை