சமச்சீரற்ற கல்வி - கவிதை

இந்தா ஓரம் போ ..
தமிழ் செய்யுள் பாடமாய்

குட்டிகளை எண்ணி பார்த்து
பட்டியில் அடைத்தது
கணக்கு பாடமாய்

உச்சி வெயில் பார்த்து
கஞ்சி குடித்தது
புவியியல் படமாய்

பஸ் வருது
லெப்ட் ல போ ரைட் ல போ ..
ஆங்கில பாடமாய்
என
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
ஆடு மேய்க்கும் எங்களுக்கு
சிலபஸ் அப்படியேதான் இருக்கு .....

எழுதியவர் : vairaa (17-Dec-14, 1:38 am)
பார்வை : 106

மேலே