ஒற்றைக்கூத்து

(உலக வரலாற்று காதலுக்கு குறைவில்லாத மௌனக்காதல் செய்த ஒருவனின் காதல் வேதனை)

சாலையில நியிருந்தா(ல்)
காலையில நா(ன்)பார்ப்பே(ன்)
பாதையில் சாமிக்(கு)உன்னை
பார்த்தாக்க நன்றி சொல்வேன்

சாமியின்னு பூமின்னு
சகலபேரு சூத்தினாலும்
சாமியார் ஆனாலும் நா(ன்)
உன்னத்தான் சூத்திடுவேன்

பேசாமல் நீபோனால்
உன்னோட நிழல்லாவன்
நிழலா நீ வந்தாலும்
நெசமா உன்ன காதலிப்ப(ன்)

ஓய்ன்சி நான் போமாட்ட
உடைஞ்சி நான் விழமாட்ட(ன்)
ஏசி நீ போனாலும்
ஏசுவா சிரிச்சிடுவ(ன்)


கோபுரம் என்னைப்போல்
சொட்டு சொட்டா அழுவுதடி
கலசமெல்லாம் எனக்கு
கண்ணீரா தெரியுதடி

உன்னைப்போல் கடளுலும்
ஒடியோடி ஒலியுதடி
என்னைப்போல் கோபுரமோ
ஏங்கியே நிக்குதடி

வீட்டோட கூறைக்கம்பம்
வளைஞ்சிதான் நிக்குதடி
குனிஞ்சி நீ நிக்குறேன்னு
நிமிர்ந்து கூடப்பார்த்ததில்லை

அறுகால்படி போல் என்னைப்
நீ தாண்டிப்போனா
அடியே உன் கால்ப்பட்டு
என் நெஞ்சம் நசுங்குதடி

அந்த பாவக்கணக்கு
உ(ன்)கணக்கில் வரவேனா
உன் பாதமாய் மாறிக்கிறேன்
பாவகணக்க ஏத்துக்கிறேன்

வேனான்னு போகாத
விலக்கி நீ வைக்காத
வேதனை நூருயிருக்கு
பாவி நீ கொள்ளுறியே
அதைவிடவா பெரிதிருக்கு?

என்றெல்லாம்
காலங்காத-அதில்
உனக்கென்ன பங்க்கிறுக்கு?

உனக்கு நா(ன்) சொந்தமுன்னு
சொல்லி நீ போனாக்க
சொர்க்கத்தில் நானிருப்ப
சொல்லாமல் போனாலும்
சுகமாதான் செத்திடுவ

பாருடின்னு -ஓ(ன்)பக்கத்தில் வரமாட்ட
பாடுபாவி மொவனுக்கு
இந்த ஜென்மத்தில்
உன்னைப் பார்த்ததே போதுமடி

எழுதியவர் : தே.ராகுல்ராஜன் (17-Dec-14, 10:24 am)
பார்வை : 100

மேலே