நவீன தாலாட்டு

கண்ணே கண்மணியே
என் அன்பு laptopபே
காலையிலே அப்பன்
iphon வாங்கித்தருவார்
கவலை இன்றி கண்தூங்கு
நாளைக்கு பாட்டி
skypeபில் கதை சொல்வர்
பாட்டன் youtubeபில்
பாட்டிசைப்பார்.
laptopபே கண்தூங்கு
அக்கா ipad வாங்கித்தருவார்
அண்ணா ipod வாங்கித்தருவார்
மாலையிலே மாமன்
carரில் வருவார்
கண்ணே கண்தூங்கு
கண்மணியே கண்தூங்கு

எழுதியவர் : AP. கஜேந்திரன் (11-Apr-11, 4:05 pm)
சேர்த்தது : பூவதி
பார்வை : 426

மேலே