என் கையேந்திய வாழ்க்கை

வயற்றில் பசி, கண்களுள் வலி - ஆனாலும்
வாழ்ந்தாக வேண்டிய வெறியில்லை!
முதுமையை தள்ளிப்போட வழியில்லை!
முடிவுநாளை நினைக்கவும் துணிவில்லை!

இனிமையை தொலைத்த மனம்
இடிந்தே போயிருந்தாலும் - இங்கே
பிச்சையை திருடவரும்
எச்ச மனிதர்களுக்கும் சேர்த்துதான்
என் கையேந்திய வாழ்க்கை!

பிடிஅரிசிதான் ஒருவேளைக்கு,
சில்லறைகள் நாளைக்கு!

-DrSurya CR

புகைப்படம்: Pon Mani‎ (எந்தசாமிக்கு விரதம் இருக்கிறான் பிச்சைகாரன்?!),
FB குரூப்: " மனிதம்.. "

எழுதியவர் : Dr.C.R.Suriyakumar (18-Dec-14, 12:18 pm)
பார்வை : 512

மேலே