எமது முதியோர் இல்லம்

எங்கள் (இதய வாசல்) முதியோர் இல்லம் !
------
அன்பினால் இல்லம் கட்டி
அன்பினால் உள்ளம் தொட்டு
அன்பை தந்து இன்பம் வாங்கும்
பின்னிக்கோர்த்த புதுஉறவுகள் – இது
துன்பம்தீர வழிகாட்டும் இதயவாசல்!

வாழ்வை வாழ்ந்து முடிக்கையில்
பழுத்த இலைகளுக்கு புதுசுவாசம் !
வாயர சிரித்து ஆழ்ந்து உறங்கி
மனமகிழ்ந்து வயிறு நிறைந்து
மதிப்புடன் கிடைக்கபெறும் புதுப்பாசம் !

வாழ்ந்து ஓய்ந்த வயதில்
எமக்கு சுதந்திரம் சுவாசிக்க
நிரந்தர வசந்தகாலம் !
மனதிற்கு உவந்த காலம் !
ஸ்வரங்களும் இசைந்து – எம்
ஸ்ருதி மீண்டகாலம் !

ரத்தஉறவுகளுக்கு பின்வந்த
புத்தம்புது மனிதர்கள் !
மனிதநேயம் நிறைந்த
புனிதம்சேர் புதுஉலகு ! – இது
இதயவாசலுக்குள் ஒரு சொர்க்கலோகம் !

வாழ்த்த வேண்டி வாய்க்கு வந்த
வாழ்த்துப்பா அல்ல – இது
மறுக்கப்பட்டஎங்களின்
இரண்டாம் வாழ்வுப்பா !

- DrSurya CR

எழுதியவர் : Dr.C.R.Suriyakumar (18-Dec-14, 12:31 pm)
பார்வை : 881

மேலே