புல்லாங்குழல் ஓசை

புல்லாங்குழல் ஓசை

துள்ளாத மனமும் துள்ளும்
கிள்ளாத அசையை கிள்ளும்
இன்ப தேனையும் வெல்லும்
இசை இன்ப தேனையும் வெல்லும் !

''புல்லாங்குழல்-
ஒவ்வொரு துவாரமும் இசை வாய்
ஒருங்கினைந்தால் தானாய் தலை அசைவாய்! ''

"தசைக்கு நடுக்கம் தரும்
இரைச்சல் இல்லாத ஓசை - இசை !"

போதும் இசை விளக்கம்
வாருங்கள் செல்வோம்
கவிதைக்குள் ஒரு கதை படிக்கலாம் ..

" அவன் அழகன்
பெயர் அமுதன்
தொழில் அதிகாரி
இரவில் பிச்சைக்காரன் - ஏன் ?
அது அவன் சேவை !

தொழில் முடிந்ததும் வேகம் கொள்வான்
வீடு வந்ததும் வேறு கோலம் கொள்வான்
தோளில் ஒரு பை இடுவான்
பைக்குள் புல்லாங்குழல் இடுவான்
பொலு பொலு வெனவே நடந்து
மனிதர் புழங்கும் நடை பாதை வருவான்
தென்படும் ஒரு பிச்சைக்காரர்
அருகமர்ந்து குழலிசைப்பன் !

ஏழ்மைக்கு இரங்காத நெஞ்சமுகம்
இவன் இசைக்கு மயங்கும்
ஏதேதோ போட்டு செல்லும்
கிடைப்பதை சமமாய் பங்கிட்டு
அருகிருபோற்கு அளித்து விட்டு
மன நிம்மதியை மட்டும் தான்
எடுத்து வீடு திரும்புவான் !

இந்த செயல் கண்டு மயங்கி
அவனுக்கு கிடைத்த துணைவி - செல்வி
அந்த செயல் மீண்டும் தொடர்வதாலே
அவன் இப்போது துறவி !

இரவு தொழிலை விட்டுவிட சொன்னாள்
இதை கண்டு தானே மயகினாய் என்றான்
அது அப்போ , என்றாள்
ஏன் இப்போ , என்றான்
விடை தராமலே விட்டுச்சென்று விட்டாள்!

விளங்கியது தடை போடுவது
அதிகாரி என்ற அந்தஸ்து என்று
விட்டு விட்டான் ,சேவையை அல்ல
அதிகாரி என்ற போதையை !

ஏழ்மைக்காக முழு நேரமும் இசைக்க
துவங்கினான் ரோட்டில் !

அந்தஸ்து என்பதை அவன் விட்டாலும்
அது அவனை விடவில்லை
இப்போது அவன் இசை அமைப்பாளர் !

ஏழ்மைக்காக இப்போதும் இசைகின்றான்
இசை கூட்டில் !

அவன் உடலால் மட்டும் அழகன்
அல்ல உணர்வாலும் தான்......!





- சுஜிமோன்

எழுதியவர் : சுஜிமோன் (18-Dec-14, 9:39 pm)
Tanglish : pullangulal oosai
பார்வை : 995

மேலே