அவளின் காதல்
அவளின் காதல்:
2 வருடம் ஆகின நம்
காதல் பிறந்து என்னுள்.!
1 நிமிடம் கூட ஆகலையா?நம்
காதல் பிறந்து உன்னுள்??
{இதில் 'என்' என்ற வார்த்தை
இட்டால் அது தனிக் காதலாகிவிடும்!
'நம்'காதலுக்குள் சொற்களும் பிரியா!}
இந்த பேருந்து நிலையம்
உன்னை எனக்கு முதலில்
அறிமுகப்படுத்தியது!
அன்றுமுதல் இன்றுவரை
எல்லாப் பேருந்துக்கும் நான்
அறிமுகமானேன்.
உன்னைத்தேடி.!
இதயத்தின் மூலையில் ஒரு
கேள்வி கனக்கிறது,
"நீ என்னை காதலிப்பாயா!" என்று. இல்லையேல்,
உணர்ச்சியின் உச்சத்தில்
கண்ணீர் வடியும்,
"சாக வேண்டும்" என்று.
நான் தினம் யோசிப்பேன்
உன்னை என்று காதலித்தேன்
என்று!
விடை தெரியாமல் ஆனந்த
மகிழ்ச்சி அடைவேன்,
காரணமில்லாமலும் உன்னை
காதலித்தேன் என்று.
தினம் நான் உன்னை நேசிக்கிறேன்,
நீ என்னை நேசிப்பாய் என்று,
தினம் நான் என்னை நேசிக்கிறேன்,
நீ என்னை நேசிப்பாய் என்று!
இரவு வந்தால் எனக்கு
மட்டும் இனிமை,
காரணம்,
தலையணையை நீ என்று
அணைத்துப்பிடிக்க வைக்கிறது
என் தனிமை.
விடியாத இரவில் விடிய விடிய
என் ஞாபக்கவி எழுதினேன்,
முதன்முறையாய் உன்னிடம்
கொடுக்கப் போகிறேன்.
அதில் ஒரு சுகம்!
கிடைக்குமா பதில் சுகமாய்...!
பார்க்கிறேன் உன்னை நான்
எதிர் பார்க்கிறேன்.
பதில் சுகமாய் முடிய .......!
அன்புடன்
சுகமானவனுக்கு சுகமானவள்
எழுதும் சுகக்கடிதம்!!♥♥