என்னவென்று கூற...

கொஞ்சி பேசும் இளம் மாதர் கைபேசியில்
கெஞ்சி கூத்தாடும் செந்தமிழ்...

மலர் மஞ்சம் இனம் சேரும் இல்லற வாழ்வும்
விவகாரத்தில் முடிந்து தொடரும்...

ஆய கலைகள் அறுபத்தி நான்கு படைத்தவனுக்கு
இன்று ஆங்கிலம் தான் முகவரி...

கடவுளை தேடி தேடி அலைபவனுக்கு
தேசம் தோறும் கோவில்கள்..

நெஞ்சம் போருக்கதிலையே என முழங்கியவன்
கூட சிலையாக மட்டுமே மிளிர்கிறான்

மேற்கூறிய இந்த நிலையை மாற்றும் தலைவர்களும் நாய்க்கு பொறை போடுவதுபோல் மக்களை ஏமாற்றுகிறார்கள்..

இந்த வேதனை தான் நிந்தனையோ
.....அட தூணிலும் துரும்பிலும் கலந்தவனே இதனை நான் என்னவென்று கூற.......




எழுதியவர் : kalambagam (11-Apr-11, 11:15 pm)
Tanglish : ennavendru koora
பார்வை : 459

மேலே