விடுமுறை நாட்களில் என்ன செய்யவாள் என் தேவதை

விடுமுறை நாள் என கிடப்பாளோ
இல்லை
விரும்பிய உணவை சமைப்பாளோ

விடியகாலையிலே விழிப்பாளோ
இல்லை
விடிந்த பிறகு விழிப்பாளோ

பட்டாம்பூச்சியாய் சிரிக்கும் அழகி
பள்ளிக்கூடத்தை நினைப்பாளோ
இல்லை
பக்கத்து வீட்டு
பெண்களை அழைந்து
நடந்ததையெல்லாம் சொல்லி சிரிப்பாளோ

பாழ்ழடைந்த சுவற்றில் ஏறி
பைத்தியம்போல் நடப்பாளோ
இல்லை
பாத்திரம் மட்டும் துலக்கிவிட்டு
பல்லை துலக்க மறப்பாளோ

வாசலில் வைத்த பூச்செடி அருகில்
லேசாய் பேச நினைப்பாளோ
இல்லை
ரோசா பூவும்
தான் என்னும் திமிரியில்
கண்ணாடிமுன் கனைப்பாளோ

நாளைப்பள்ளி என்ற பயத்தில்
நடுங்கி கொஞ்சம் இருப்பாளோ
இல்லை
நாள்காட்டியை மடியில் வைத்து
விடுமுறை நாளை குறிப்பளோ



அப்பாவுக்கு தண்ணிர் தந்து
அம்மா கேட்டால் முறைப்பாளோ
இல்லை
அண்ணன் சட்டை துவைக்கும்போது
காசியிருந்தால் எடுப்பாளோ

தூரமிருந்து பார்த்தவன் யாறேன
தூங்கும்போது நினைப்பாளோ
இல்லை
தும்பல் வந்தால் எவனோ நினைகிறேன் என்று
எச்சில் முழுங்கி எழுவாளோ

கருத்துப்போன தோட்டையும்
கொலுசையும் சலவை செய்து அணிவாளோ
இல்லை
நாளைப்பள்ளி கிளம்பும்வரையில்
நைட்டி மட்டும் அனிவாளோ

அறுத்த நகத்தை எடுத்துப்போட்டு
அசட்டு நகமே என்பாளா
இல்லை
அறைத்து குழைத்து
மறுதாணி வைத்து அங்கும் இங்கும் அலைவாளா

வீட்டுப்பாடம் போல
என்னை அப்பப்ப நினைப்பாளோ
இல்லை
விடுதி சாவிப்போல என் நினைவை
கழுத்தில் மாட்டி அலைவாளோ

தாயைப்பிடித்து அவளைக்கொஞ்சி
வெண்ணிர் வைக்க சொல்வாளோ
இல்லை
குளித்த பிறகு தலையை விரித்து
பேயைப்போல அலைவளோ




கொஞ்சம் கொஞ்சூம்
நிறமும் கூட மஞ்சள் பூசி அலைவாளோ
இல்லை
மற்ற நாளா ஞாயிரா என்று
காலில் கூட வைப்பாளோ

அம்மா அழைத்தாள்
இவள் வேறென்று ஆத்திரத்தில் துடிப்பாளோ
இல்லை
அப்பாவென்று அடிக்கடி அழைத்து
அண்ணன்மேல் குறைகள் சொல்வாளோ

வீட்டுமாடம் விளக்கை துடைத்து
சாதனை செய்ததாய் கலைப்பாளோ
இல்லை
வீட்டின் அருகில் உள்ளவர்ப்போல்
வாழனும் ஆசை என்பாளோ

குழந்தை முகத்தை வைத்துக்கொண்டு
கொட்டம் செய்து கிடப்பாளோ
இல்லை
மற்றவர் குழந்தை மடியில் வைத்து
கன்னம்கிள்ளி விடுவாளோ

முகங்கள் நிறைய சந்தனம் பூசி
முனியைப்போல மொழிப்பாளோ
இல்லை
அம்மா முந்தானையில்
காசுவிழ்த்து ஐஸ் வாங்கி திண்பாளோ

கதவு ஜன்னல் இழுத்துப்பூட்டி
தனிமை வேண்டும் என்பாளோ
இல்லை
அறைக்குள்நுழைந்து
தாழ்ப்பாள்போட்டு
ஆடமுயற்ச்சி செய்வாளோ



அம்மா கட்டும் பாவாடைக்கு
நாடாக்கோத்து தருவாளோ
இல்லை
வேலை செய்ய அம்மா சொன்னால்
பெயில் ஆவேன் என்று
மிரட்டி கொஞ்சம் விடுவாளோ

காதின் ஒரம் கடிகாரத்தின்
ஒசைக்கேட்டு படிப்பாளோ
இல்லை
காலை மாலை பொழுதுகள் முழுதும்
டி.வி முன்னே கிடப்பாளோ

ஆழுத்தக்காரி என்று திட்டு
ஆயாவிடம் பெறுவாளோ
இல்லை
அடுத்த வீட்டு கிழவனை
கிண்டல், கேலி செய்வாளோ

ஆடுகுட்டிப்போடும் போது
கண்கள் மூடிகொள்வாளோ
இல்லை
அந்த குட்டி திண்ணுமென்று
வீட்டில் அலறிச்செடியை பரிப்பாளோ

படித்தவளாய் என்பெயரில் எழுதி
படிக்காதவளாய் பாடுவாளோ
இல்லை
பைத்தியகாரன்
பைத்தியக்காரன் என்று
கூவிக்கொண்டே இருப்பாலோ

என்னதான் செய்வாள்
என் தேவதை?

எழுதியவர் : தே.ராகுல்ராஜன் (19-Dec-14, 10:38 pm)
பார்வை : 143

மேலே