பத்திரமான பத்து துளிகள்

இந்த தலைப்பை தந்த அருமை நண்பர் றாபியின் கிறுக்கல்கள்.
அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் ...

..."" பத்திரமான பத்து துளிகள் ...""

சிலிர்க்கும் தென்றலின் நண்பன்
பறந்து விரிந்த புல்வெளிகளின்
அழகியதோர் மணிமுடி கோர்க்க
முடியாத முத்துக்கள் "பனித்துளி"

கார்மேகத்தின் உருவம் புனைந்து
பூமியின் உயிர்ப்பின் முன்னோடி
சிந்திடும் ஒவ்வொரு துளிகளும்
அழகின் பிறப்பிடம் "மழைத்துளி"

தாகம் தீர்க்கும் அருமருந்து ஆட்சி
மாற்றமும் இதனால் சாத்தியம்
நாளைய தலைமுறை நான்காம்
உலகப்போர் காரணி "தண்ணீர்த்துளி"

சந்தோஷ மிகுதியால் சோகத்தின்
ஆளுமையால் உள்ளத்து காயத்தால்
ஏழை வீட்டு நிரந்தரமான விருந்தாளி
வற்றா ஜீவநதியாய் "கண்ணீர்த்துளி"

உண்மை பொய்யை இடமாற்றம்
மென்மை கவியாக்க உருவாக்கும்
உணர்வு பரிமாற்ற எண்ணங்களில்
உயிர்பெற்றிடும் பேனா "மைத்துளி"

இரத்தம் சூடேறி அதுதான் இடம்
மாறும் அழகியதன் நிறம்மாறும்
உறவின் உணர்ச்சியில் உராய்ந்து
உயிர்பெறும் இந்த "இந்திரியத்துளி"

இரு உயிர்கள் ஒருமித்து உருவாகும்
உலகத்து முதலான மூல கருவாகும்
மனிதம் மரிக்க விலையற்று போனது
உன்னதமான இந்த "உயிர்த்துளி "

உன்னை பின்தொடர்ந்தே இந்த
வாழ்க்கை சுழற்சியின் இயக்கம்
அடிவைத்து நொடி நொடியாய்
நகர்கிறாய் கடிகார "மணித்துளி"

பணம் படைத்தவனுக்கு வந்தால்
வாசனை பூசிக்கொள்வான் ஏழை
அதையே வாசனையாய் பூசிடுவான்
உழைப்பின் உயிர் "வியர்வைத்துளி"

நெருக்கமான பாசத்தின் பெயரிது
வன்முறை வெறியாட்டத்திலும்
வாஞ்சையான உயிர் காப்பிலும்
இதற்கே முதலிடம் "இரத்தத்துளி"

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (20-Dec-14, 12:33 pm)
பார்வை : 60

மேலே