உருமாறிய எமன்

வந்து விட்டான்
உருவம் மாறி
இறங்கி விட்டான்
பூமியில் மனிதனை தேடி

எமன் !இவன்
பெயர் மாற்றிக்
கொண்டான்... !!!!

எய்ட்ஸ்க்கு மருந்து கண்டு பிடிக்க
அஞ்சு பயந்து நடுங்கி
உரு மாறிவிட்டான் எபோலோவாக ...!

வந்த ஏழாம் நாளில்
தான் அறிமுகம்
ஆவான்

பத்தாம் நாள்
உடல் முழுக்க
சுற்றி பார்த்து
ரத்தத்தை நிறுத்துவான்

பதினொறாவது நாள்
எலும்பை அறித்து
உயிரை குடித்து
புது தெம்பு பெறுவான்

பதிரெண்டாம் நாள்
வெளியேறுகையில்
நம் உயிரையும் எடுத்து
செல்வான்

ரத்தத்தில் நீந்தி கொண்டு இருப்பான்
துடுப்பு இல்லாமல் -கண்ணீரில்
கலந்துருப்பான்-உமிழ் நீரில்
ஒளிந்து இருப்பான்

உதட்டில் இருப்பான்
உதடு சேறும் போது கூட
மூச்சு திணறலில் கத்தமாட்டான்

தன்னுடைய இன்னொரு
இருப்பிடமாய் அங்கேயும்
தொற்றி கொள்வான்

பன்னிரெண்டு நாட்கள்
மட்டுமே அனுமதி
பூமியில் வாழ ....

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (20-Dec-14, 9:01 pm)
பார்வை : 79

மேலே