மனம்

மனம் ஓர் மனித மகத்துவம்
மாய சூத்திரம்!

அன்பால் அறிபவர்க்கோ
ஆனந்த அக மகிழ்ச்சி!

ஆசையால் காண்பவர்க்கோ
அண்டி வரும் பேரதிர்ச்சி!

அறம் செய்யும் மனமே
ஆண்டவனின் குணம்!

சினம் கொண்ட மனங்கள்
மனித குல ரணங்கள்!
சிந்திக்க மறந்த நடை பிணங்கள்!

கண் மூடி தியானம்
மன அலைகளின் சமாதானம்!

எழுதியவர் : கானல் நீர் (21-Dec-14, 6:21 pm)
Tanglish : manam
பார்வை : 321

மேலே