கல்லூரி

கல்லூரியின் கனவை நோக்கும் போது ,
எத்தனையோ நினைவுகள்,
மனதை வருடிவிட்டு செல்கின்றது .....
மாமா மச்சி என்று அழைத்த உதடுகள் ,
இன்று அருகில் நீ இல்லாமல் ,
உனக்காக ஏங்குகிறது ...
எத்தனையோ காதல் ,
எவ்வளவோ சண்டை ,
பிரிக்க முடியாத எத்தனையோ நட்பு என ,
எங்களின் அனைத்து நினைவுகளையும் சுமந்துகொண்டு ,
எங்களை மட்டும் வெளியே அனுப்பிவிட்டாய் ...
வகுப்பின் மூலையில் அமர்ந்துகொண்டு,
board தெரியவில்லை என்று எட்டி பார்த்து ,
பெண்களை sight அடிக்கும் சுகத்தை ,
நாங்கள் மீண்டும் எப்பொழுது பெறுவது??
நண்பர்கள் பின்னே ,
பேப்பரில் வாலை கட்டி ,
இனி நாங்கள் எங்கே விளையாட போகிறோம்?
lecturer class எடுக்கும் வேளையில் ,
அவரை போல் பேசி ,
கலாய்த்து மகிழ்வது எப்போது ??
late என்று கூறி class cut அடித்து விட்டு ,
மீண்டும் எப்போது சுகமாய் ஊரை சுற்றுவது ?
வருடங்களும் ,
நிமிடங்களாய் கடந்து போனது ,
ஆனால் ,
எங்கள் நினைவுகள மட்டும்,
உன்னிடமே தங்கிவிட்டது .
மீண்டும் எங்கள் பிரிந்த சொந்தங்களை பெற ,
ஒருநாள் உன்னிடம் வருவோம் ,
நினைவின் உண்மையை தர முடியாமல் போனாலும் ,
நினைவுகளை மட்டுமாவது ,
கொடுக்க தயாராக இரு .....

எழுதியவர் : mohankumar (22-Dec-14, 11:42 am)
Tanglish : kalluuri
பார்வை : 205

மேலே