துடிக்கும் என் நாடியும் உன் நினைவிலே துடிக்குதடி 555

என்னுயிரே...
தினம் தினம் விடியும்
பொழுதுகளும்...
கரைந்தோடும் வினாடிகளும்
நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது...
துடிக்கும் என் நாடிகூட
உன் நினைவிலே துடிக்கிறது...
ஒரே கிராமத்தில் இருக்கும்
காதலர்கள் கூட...
பார்க்காமல் இருக்கும் ஒவ்வொரு
வினாடியும் துடிக்கிறார்கள்...
உன்னை பார்க்க
துடிக்கிறேன்...
கடல் கடந்து
இருக்கும் போதும்...
அயல் நாட்டில் எனக்கு
சுகமென்னவோ...
நீயும் உன்
நினைவுகளும் தான்...
நான் இமை மூடும்
நேரமெல்லாம்...
என்
விழிகளில் நிற்குதடி...
என்
பயணத்தை எண்ணி...
விழிகளில் கண்ணீருடன்
எனக்கு கையசைத்தாயே...
என் கண்மணியே...
நினைவில் வரும்போது
என் விழிகளும் கலங்குதடி...
நான் உன்னை எப்போது
பார்ப்பேன் என்று...
பாலைவன மணற்பரப்பில்
தனிமையில் நடக்கையில்...
உன்னுடன் கைகோர்த்து
நடந்த அந்த நாள்...
எப்போதும் என்னை கட்டி
அணைக்கும் உன் நினைவுகள்...
உனக்கு மெட்டியிட்டு
கட்டியணைக்கும்...
அந்த நாளுக்காக
காத்திருகிறேனடி நான்...
என்னுயிரே.....