வெட்கமாய் நீ

வெட்கத்தை
ஒத்தி வைத்துவிட்டயோ
உன் ஓர விழிகள்
என்னை பார்க்கின்றன .

கையில் ஒட்டும்
வண்ணத்து பூச்சியின்
வண்ணமாய்
உன் நினைவுகளை
என்னிடமே
விட்டு செல்கிறாய்.

உறக்கம் வராத
விழிகளின்
நடுவே விழிப்பாய்
தூக்கம் கெடுக்கிறாய்.

கடைதெருவில்
கைபிடித்து செல்லும்
குழந்தையாய்
உன்
வெட்கத்தினால்
என்
நினைவு மேகங்களை
பிடித்து செல்கிறாய்

எங்கு
சென்றாலும்
மாலையில்
கூடு திரும்பும்
பறவையாய்
உன்னை நோக்கியே
பறக்கிறது
என் மனம்.

வானின் நட்சத்திரமாய்
உன் நினைவுகளை
எண்ணிக்கொண்டே
தூங்கிவிடுகிறேன்.

எழுதியவர் : மதுராம் (22-Dec-14, 8:59 pm)
Tanglish : vetkamaai nee
பார்வை : 112

மேலே