சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 26 ஏதாவுநரா – ராகம் கல்யாணி

'கல்யாணி' என்ற ராகத்தில் அமைந்த 'ஏதாவுநரா' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.

பொருளுரை:

எவ்விடத்தில் உனது இருப்பிடம்? எண்ணிப் பார்த்தால் நீ எங்கும் அகப்படுவதில்லை.

சீதை (இலக்குமி), பார்வதி, சரசுவதியென்னும் திருவின் உருவங்களிலா கோவிந்தா?

பூமி (பிருதிவி), நீர் (அப்பு), சூரியன் (தேயு), காற்று (வாயு), ஆகாயம் இவற்றிலா? பல கோடி உலகங்களிலா?

மங்களம் தருபவனே! தியாகராஜனால் அர்ச்சிக்கப்படுபவனே! சிவன், விஷ்ணு, பிரமன் என்னும் (மும்மூர்த்திகளின்) தோற்றங்களிலா? (எவ்விடத்தில் உனது இருப்பிடம்?)

பாடல்:

பல்லவி:

ஏதாவுநரா நிலுகட நீகு
எஞ்சிசூட நக பட வு (ஏ)

அனுபல்லவி:

ஸீதா கௌ ரீ வாகீ ச்வரி யநு
ஸ்ரீரூபமுலந்தா கோ விந்தா (ஏ)

சரணம்:

பூ கமலார்க்காநில நப முலந்தா
லோக கோடுலந்தா
ஸ்ரீகருட கு த்யாக ராஜ கரார்ச்சி த
சிவ மாத வ ப் ரஹ்மாது ல யந்தா (ஏ)

CARNATIC VOCAL | MARVELS OF MELODY | SANGEETHA SIVAKUMAR | JUKEBOX என்று யு ட்யூபில் பதிவு செய்து சங்கீதா சிவகுமார் பாடுவதைக் கேட்கலாம்.

சிக்கில் குஞ்சுமணி, நீலா, மாலா சந்திரசேகர் மூவர் குழலிசை வலைத்தளத்தில் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Dec-14, 9:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 90

மேலே