ஊமையாகிறது ரயில் ஓசை

கருப்பு வெள்ளை
புகைப் படத்திற்குள்
வண்ணங்களில்
நுழைகிறது நினைவுகள்.....
--------------------------------------
இலை கொண்ட துளியில்
ஒளிந்திருக்கிறது
நிழல் தேடும்
பாலைவனம்....
----------------------------------------
ஆடுகளற்ற
ரயிலடியில்
ஊமையாகிறது
ரயில் ஓசை....
-------------------------------------------
தவறில் விழுந்தவை
தவறி விழுந்தவை
தவறாய் விழுந்தவை
தவறியும் விழுந்தவை
------------------------------------------
விரல் தொட்ட
தீ துளியில்
வேடிக்கையானது
விழுந்த கண்ணீர்.....
----------------------------------------
கவிஜி

எழுதியவர் : கவிஜி (23-Dec-14, 10:14 am)
பார்வை : 2275

மேலே