பொங்கும் தமிழ் மனதில்
முன் குறிப்பு: 45 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி நண்பருடன் சந்திப்பு. USA-வில் இருக்கிறார். நானும் இன்னோரு சக பள்ளி நண்பரும் (அவரும் தள உறுப்பினர்) எழுதும் கவிதை கண்டு உற்சாகத்துடன் உடன் எழுதி அனுப்பியுள்ளார். ஓரே வகுப்பில் படித்த முவர் சரளமாக தமிழில் எழுதுகிறார்கன்.
இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா.... மூவரும் ஆங்கில மீடியத்தில் படித்தவர்கள்.... தமிழின் மேல் பற்று ஏற்படுத்திய பெருமை எங்கள் ஆசான் அய்யா புலவர் வைத்தியநாத அய்யரையே சாரும்.
நண்பரை தளத்தில் சேர அழைத்துள்ளேன்.
கீழே அவர் அனுப்பிய மூன்று கவிதைகள்:
மகிழ்ச்சி
-----------
கண்கள் கனவுகள் காண
கால்கள் தனியாக மிதக்க
மனம் காற்றாக பறக்க
இனம்தெரியாத ஒரு இனிமைக்கு
இமை தனை மூடும் இன்ப அனுபவம்
புதையல்
------------
உனக்கே தெரியாமல் உள்ளுக்குள்
மறைந்திருக்கும் பொக்கிஷம்
வித்திடாத கற்பக விருட்ஷம்
விதியை மாற்றிடும் விசித்திரப் பெட்டகம்
கற்பனையில் காண துடிக்கும் பொருட் குவியல்
நிலத்தின் அடியில் கிடக்கும் நித்திய அதிசயம்
நிலை கொள்ளாமல் ஆடவைக்கும்
நிரந்தர போதை பொருள்
பொறாமை யாலும் பேராசையாலும்
மனிதரை மிருகமாக்கும் மாயை
இதை கண்டவர் களிப்புறுவர்
காணாதவர் தேடி அலைவர்
கற்றவர் இக் கற்பனையை
எண்ணி (எள்ளி) நகையாடுவர்
மாதப்படி
------------
மாதத்தின் மாற்றம் இல்லா முடியும்
மனிதனின் மனம் தனில் மகிழ்ச்சி
பொங்க வைக்கும் இன்ப நாள்
மனம் கவரும் மல்லிகை மணம் பரப்ப
மனைவிடம் கொண்டு சேர்த்த
கரைப படியாத காகிதமும்
கதை கூறும் காதலுடனே...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
