காதலன் காதலியின் பிறப்பு - உதயா

கருவிழியாக
நீ
இருக்க
உன்னை காக்கும்
இமையாக
நான் இருந்தேன்
உணர்வுகளின் சங்கமமான
நினைவுகளின் கல்லறையான
இதயமாக
நீ
இருக்க
இதய துடிப்பாக
நான் இருந்தேன்
பகலவனாகவும்
இருளவனாகவும்
நீ
பிறப்பெடுத்த போதெல்லாம்
உன்னை சுமந்து செல்லும்
வானமாக
நான் இருந்தேன்
வானமென்னும்
வேடனின்
வில்லாக (வானவில்)
நீ
பிறப்பெடுத்த போதெல்லாம்
உன்னை உருவாக்கும்
நீர்துளியாகவும்
ஆதவனின் ஒளியாகவும்
நான் இருந்தேன்
பூந்தோட்டத்தில்
வண்ண வண்ண
பூக்களாய்
நீ
பிறப்பெடுத்த போதெல்லாம்
உன்னை ஈன்ற செடியாகவும்
உன்னை தாங்கும் காம்பாகவும்
நான் இருந்தேன்
தேனிகளாக
நீ
பிறப்பெடுத்த போதெல்லாம்
உன் பசியை போக்கும்
தேனை உருவாக்கும்
மலராக
நான் இருந்தேன்
தீபஒளியாக
சிரிக்க
நீ
பிறப்பெடுத்த போதெல்லாம்
அதில் மடியும்
திரியாகவும் எண்ணெய்யாகவும்
நான் இருந்தேன்
தென்றலாக
நீ
ஜனனமாகும் போதெல்லாம்
உன்னை ஈன்றெடுக்கும்
கடல் அலையாய்
நான் இருந்தேன்
ஆற்றலாக
நீ
ஜனனமாகும் போதெல்லாம்
அதில் மடியும்
எரிபொருளாக
நான் இருந்தேன்
என்னவளே
நீ
எத்துனைமுறை
எம்மாதிரி பிறப்பெடுப்பினும்
உன்னை காக்கும்
உன்னை சுமக்கும்
காதலனாகவே
நான் இருப்பேனடி
பிறப்பேனடி...........