விதி வரைந்த கோலமிதா

கண்ணே மணியே என்று
காதலித்து வந்தவர்கள்
கலியாண பேச்செடுத்தால்
கை கழுவி விடுகின்றார்கள்

காரணம் என்னவென கேட்க்கவே
கன்னியிடம் காசில்ல -அதனால்
கல்யாணப் பேச்சில்ல
அழகான செல்வத்திற்கு இது ஒரு விதியா

அக்கினியை சாட்சி வைத்து
ஆரம்பித்த பந்தம்
முந்தானை முடிச்சோடு
முடங்கிப் போகுது பெண் வாழ்வு

கட்டினவன் காலடியில்
கல்லாத்தான் இருக்கச் சொல்லுது விதி
கட்டின கணவன் இறக்கவே
கட்டையிலே போகும் -சொல்லுது சமூகம்

விதவை என தலை விரிச்சு
வீட்டில முடங்கச் சொல்லுது விதி
இப்படியும் உள்ளதோ பெண்ணுக்கு
இத்தனை கோலங்கள்

எழுதியவர் : (24-Dec-14, 7:02 pm)
பார்வை : 528

மேலே