நான் வரைந்த மடல்

விண்ணில் இருந்து
மண்ணில் வந்த
தேவதையே.
உன்னில் எனக்குத்
தேவையடி ஓர் இடமே.....

என் கண்ணில்
விழுந்து என்னைப் பரி
தவிக்க வைத்த தேவதையே
என் கனவில் தேவையடி
உன் முகமே.........

என் உடலில் உள்ள
நரம்பினாலே பிண்ணல்
இட்டு உன் நினைவு
என்னும் பூவைச் சூட
வைத்த தேவதையே
உன் இதயத்தில் தேவையடி
ஓர் இடமே........

நித்திரையப் பறித்த
தேவதையே
நித்தமும் தேவையடி
உன் மடியே........

சிரிப்பு என்னும்
நெருப்பு மூட்டி தவிப்பு
என்னும் சமையலை
எனக்குள்ளே சமைக்கும்
தேவதையே........

பக்கம் வந்து கிளு கிளுப்பு
மூட்டி சலிக்காமல் என்னைக்
கழிப்பூட்டி அன்பு என்னும்
பாத்திரம் கொடு தவிப்பு
என்னும் சமையலை
சுவைத்திடவே.........

உன் எடுப்பான மூக்குத்தி
முத்தம் கொடுக்கையில்
கடுப்பேற்றாமல் பார்த்துக்கோ....

ஓசை எழுப்பும்
வளையலுக்கும் தடை
போட்டுக்கோ
சிணுங்கும் கொலுசுக்கும்
விடுதலை கொடுத்துக்கோ....

இது என் எச்சரிக்கை
இல்லையடி தேவதையே
இது என் இச்சையின்
நச்சரிப்படி தேவதையே.....

கச்சிதமாய் மடல் வரைந்தேன்
அச்சாணி கொண்டு
அச்சியில் வார்த்தாப்போல்
யாரைக் கெஞ்சி இதை நான்
கொடுப்பேனடி வச்சியே......

மடல் வரைந்த மன்னன்
எனக்கு உன் இடம்
தெரியவில்லையடி
தேவதையே அடுத்த
தேவதாஸ் நானாக மாறும்
முன்பே வாம்மா என் தேவதையே......

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (24-Dec-14, 6:46 pm)
பார்வை : 67

மேலே