காதல் மொழி

அரணாய் நீ இருப்பாய்
எண்ணுகையில் அனல் போல்
அல்லவே வார்த்தை
தெளிக்கிறாய்..

அதில் நான் கருகி
போவது உனக்கு
தெரியவில்லையா ..

கொஞ்சம் அன்பையும்தான்
தெளித்துவிட்டு செல்லேன் ..

கணினிக்கும் , மனிதனுக்கும்
இடைப்பட்ட மொழி உள்ளதை போல
கன்னிக்கும், உனக்குமான
மொழி தேவையோ...

நமக்கான மொழி உருவாக
உன்னை படிக்கும் சந்தர்ப்பம்
கொடு...

- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (25-Dec-14, 3:16 pm)
Tanglish : kaadhal mozhi
பார்வை : 530

மேலே