இன்பக்காலங்கள் - உதயா

சின்ன சிறுவயது
குறும்பு செய்தல்
விளையாடுதல்
இது மட்டுமே
கனவு...

சிறகு முளைத்தது
பறந்தோம்
வானத்தையும்
தொட்டுவிட்டும்
மகிழ்சியின் எல்லையில்

துன்பமென்னும்
பூ மலராத காலம்
இன்பமென்னும்
செடிமட்டுமே
முளைத்திருந்த
காலம் அது..

உடுத்துவதோ
கிளிஞ்ச ஆடைதான்
மனதில்
மன்னன் மகாராணினு
நினைப்பு

வாழ்வதோ
ஓட்டை குடிசைவீடுதான்
மனதிலோ
மாளிகைவீடுனு
நினைப்பு

ஆண் பெண்
பாகுபாடுன்றி
சிலவேளைகளில்
சிரிப்பை உணவாக உண்டு
பசியை மறந்து
கிடந்தோம்

வாயில்ல உயிரினத்தை
உறவாக்கி கொண்டோம்
திம்பிகளையும்
வண்ணத்து பூச்சிகளையும்
நம் அன்புக்கு
அடிமையாக்கிகொண்டோம்

சின்ன வயதில்
நமக்கு நாமே
உலகம்
நமக்கு
நாமே கடவும்

அன்பினை விதையாக விதைத்து
சிரிப்பினை விளைச்சலாக வளரவைத்து
சமத்துவத்தை உணவாக
பகிந்துண்டே
வாழ்தோம்
வளர்ந்தோம்.....

எழுதியவர் : udayakumar (25-Dec-14, 3:37 pm)
பார்வை : 73

மேலே