உந்தன் காதலன்

ஆழகை கொல்லும் தருணம் நீ
நிலா ஒளியின் வெளிச்சம் நீ
நிஜத்தில் என் நகலும் நீ
இதயத்தால் என்னை அனைத்தவள் நீ
இதழ் திறந்து மணந்தவள் நீ
நிகழாமல் போகும் நினைவு நீ
வானவில் வண்ணம் நீ
நான் வாகைச்சூடும் பெண்ணும் நீ
வலைந்தோடும் என் எண்ணம் நீ - தான்
வாழ்க்கையில் முதலடியும் நீ தான் உன்னை
அறியாமல் இருக்கும் சிறு பிள்ளை நான் தான்
பிழையாய் வரும் கால் புள்ளி நான் தான்
பின்னாளில் உன் பெயருக்கு முன்னால் வரும்
முதல் எழுத்து நான் தான்
இன்னாளில் உன் பின்னால் வருபவன் நான் தான்
உந்தன் காதலன்....

எழுதியவர் : kamal © (25-Dec-14, 3:16 pm)
Tanglish : unthan kaadhalan
பார்வை : 70

மேலே