இல்லையே , ஒரு வளர்கூடமும் வாழிடமும்
ஓர் இரவில் முளைப்பதில்லை
ஊர் ஊன்றிய எவ்விதையும் ....
யார் உள்ளங்கையாலும்
தடுக்கப்படுவதில்லை உதி கதிரவன் ......
பேரின்றி விளிக்கப்படுவதில்லை
பிறப்பெடுத்த எவ்வுயிரும் ....
சீரின்றி பிறப்பதில்லை
செழுமையான கவிதை ..
போரின்றி புரியாதோ
மானுட உயிரின் புனிதம் ......??
முத்துக்கும் மூச்சுவிட
உள்ளது சிப்பி ...
நத்தைக்கும் வாழ்நாள் கழிக்க
கூடுண்டு ...
எத்திசைகளும் தோன்றும் முன்
உதித்த என் தொப்புள்கொடி சொந்தங்களுக்கு
கத்துங் கடலிலும் காய்ந்த நிலத்திலும்
இல்லையே ஒரு வளர்கூடமும் .வாழிடமும் ....
தமிழ்க்குடிகள் செய்த பாமென ....ஓர் இரவில் முளைப்பதில்லை
ஊர் ஊன்றிய எவ்விதையும் ....
யார் உள்ளங்கையாலும்
தடுக்கப்படுவதில்லை உதி கதிரவன் ......
பேரின்றி விளிக்கப்படுவதில்லை
பிறப்பெடுத்த எவ்வுயிரும் ....
சீரின்றி பிறப்பதில்லை
செழுமையான கவிதை ..
போரின்றி புரியாதோ
மானுட உயிரின் புனிதம் ......??
முத்துக்கும் மூச்சுவிட
உள்ளது சிப்பி ...
நத்தைக்கும் வாழ்நாள் கழிக்க
கூடுண்டு ...
எத்திசைகளும் தோன்றும் முன்
உதித்த என் தொப்புள்கொடி சொந்தங்களுக்கு
கத்துங் கடலிலும் காய்ந்த நிலத்திலும்
இல்லையே ஒரு வளர்கூடமும் .வாழிடமும் ....
....