சுனாமி
சுனாமி 10-வது ஆண்டு நினைவு அஞ்சலி
காலனின் பினாமியாய்
வந்த சுனாமி !!
கடலில் அலைகளுக்கு
பதில் தலைகள் !!
நிலத்தின் நான்காவது
பாகமானது கண்ணீர் !!
சில்லரை காசுகளாய்
கல்லறையில் மனிதர்கள் !!
உயிர்களை உள்வாங்கியது
உவர் நீர் !!
மறப்பதையே மறக்கவைத்த
மாபெரும் சோகம் !!
மீண்டும் வந்து விடாதே !!
நீயும் அனாதை ஆவாய் !!
பாப்பாரப்பட்டி நாகராஜன்
டிசம் 26 2014