கொஞ்சம் கொஞ்சமாய் நிறைய கேள்விகள் - மகிழினி

ஏதேதோ கேட்க வேண்டும் என்று எழுத தொடங்குகிறேன் ! பதில்கள் யார் அளித்தாலும் நலமே !

நான் படித்துக்கொண்டு இருக்கிறேன் ...... என்னுடை படிப்பு என்னை இந்த சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ கத்துக்கொடுத்து இருக்கிறது ! சரி எது தவறு எது எனும் அறியும் நிலைபாட்டில் ஓரளவேனும் நிலையாக நிற்க இந்த கல்வி உதவி இருக்கிறது !

ஆனால் நம் நாட்டில் கல்வி எப்படி இருக்கிறது ?
வெறும் வேலைக்கான உத்திரவாதமாகவா இல்லை சுய நிலையுடன் தனக்கான தேவையை தானே பூர்த்தி செய்துகொள்ளும் உத்வேக சிந்தனை கட்டமைப்பாகவா?

தெரியவில்லை .......

வயிற்றுக்கு உணவில்லை எனும் போது குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கு எப்படி வருவார்கள் என்று யோசித்து இலவச மதிய உணவு திட்டம் கொண்டுவந்தது தமிழக அரசு முன்னொருநாள் ...

இன்றும் டீக்கடையில் கையில் கண்ணாடி தம்ளருடன் அக்கா டீ இந்தாங்க என்று டீ தரும் அந்த பையனுக்கு பள்ளி செல்ல தடையாய் இருப்பது வெறும் வறுமைதானா?

நீங்கள் யாரேனும் கோவை வாசியாக இருந்தால் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி செல்லும் வழியில் சாந்துவில் பொம்மை செய்து விற்கும் நம் நாட்டின் கிழக்கு தேச மக்களின் குழந்தைகளை பார்க்கலாம் ......... உங்க பிள்ளைகள ஏன் ஸ்கூல் க்கு அனுப்பல அப்டின்னு கேட்டா அவர் சொல்றாரு இஸ் ஸ்கூல் மே பஸ் தமிழ் ஹி சிக்கா தே ஹே என்று ...

சாதாரண ஒரு அடிப்படை கல்வி கற்க இங்கே மொழி என்பது தடையாக இருக்கிறதா ?

(CBSE ஸ்கூல் போகலாம்னு சொல்லாதீங்க ! பெரிய வீட்டுல கணவன் மனைவி ரெண்டு பெரும் வேலைக்கு போன கூட அவங்க சம்பளம் எல்லாம் டெர்ம் பீஸ் கட்டியே கரைஞ்சுடுது ... அவங்க நிலையே அப்படியென்றால் இவர்கள் நிலைமை )

அதே வழியில் தான் கல்லூரியோடு பள்ளியும் இயங்கி வருகிறது .... படிப்பு தரும் குருமார்கள் யார் கண்ணிலும் அவர்கள் படவில்லை என்பது ஆச்சரியம் தான் .....

அப்படி என்றால் பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் கல்வி பொது உடமை ஆக்கப்பட்டுள்ளதா ?

மீதத்தை நாளை கேட்கிறேன் ..........

எழுதியவர் : நித்யா (26-Dec-14, 3:17 pm)
பார்வை : 531

சிறந்த கட்டுரைகள்

மேலே