மறக்க முடியுமா 26=12

கடல் மாதாவுக்கு
இன்று என்ன
சந்தோசமோ...!

கடல் தாய்க்கு
இன்று என்ன
ஆனந்தமோ....

கெங்கா தேவிக்கு
இன்று என்ன குஷி....

ஓ பொங்கி
எழுந்து பூமி மேல்
பரவலாக
வந்தமையை
நினைவு கூர்ந்து
வந்த மகிழ்ச்சியோ....

கடல் நீர்
பற்றாமல்
மனிதனின்
கண்ணீரையும்
பரிசாகப் பெற்று
விட்டோம் என்ற
ஆணவமோ...!

ஆண்டாண்டு
அழுதாலும்
மாண்டவர்
வருவதில்லை
அதை அறிந்தும்
மனிதன் அழாமல்
இல்லை.....

வக்கிரம்
கொண்டு வந்தாய்
வாரிச் சுறுட்டிச்
சென்றாயே....

நீ அகோரம்
கொண்டு வந்தாயோ
ஆசை கொண்டு
வந்தாயோ ஐயோ
சொந்தங்களைக்
கொண்றாயே
சொத்துக்களைத்
தின்றாயே.....

தீர்ந்ததா அம்மா
உன் பசி தனிந்ததா
அம்மா உன் அகோரம்.....

வன்முறையில்
சிக்கி மனம்
நெறுங்கிய
எங்கள் இதயத்தில்
நீ கொடுத்த பெரும்
அடி இவை மறக்க முடியுமா
கடல் தாயே எங்கள்
உறவுகளை பட்ட வலியை
நீயுமா எங்கள் எதிரி
ஆனாய் தாயே.......

இன்னும் ஒரு
முறை வந்து விடாதே
வருந்தக் கூட மனிதன்
இல்லாமல் செய்து
விடாதே........

உன்னிடம்
கை ஏந்தும்
ஏழைகள் அதிகம்
அவர்களுக்கு
வாழ்வு கொடுக்கும்
அன்னை நீ என்று
மறந்து விடாதே......

அகோரம் வேண்டாம்
ஆக்கிரமிப்பு வேண்டாம்
பொங்கி எழ வேண்டாம்
போதும் போதும் தாயே
என்றும் தேவை உன்
பொறுமையம்மா
கடல் தாயே......

சுனாமியில் உயிர் நித்த
அனைவரது ஆத்மாவும்
சாந்தி அடைய இறைவனைப்
பிராத்தனை செய்வோம்....
உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு
ஆழ்ந்த அனுதாவம்....

இ.சாந்தா

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (26-Dec-14, 4:19 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 200

மேலே