நன்மை தரும் நாராயண நாமம்

நன்மைதரும் நாராயனநாமம்
------------------------------------------

கள்வனாய்க் கயவனாய்க் காமுகனாய்க் காலம் கழித்த பின்னே

இன்று காயம் அற்று போய்,முதுமையும் நோயும் தாக்க
சுற்றமும் நண்பர் குழாம் கூட தள்ளியே நிற்க

ஈமொய்க்கும் நெய்க்குடம் போல் படுத்துக் கிடந்தான்

அப்போது தன்னையும் அறியாமல் மூடன்

ஆதிமூலா, அதிமூலா என கேவினான் கூவினான்

அக்கணமே அக் கருணாகரனும் அவன் கண்முன்னால்

பெரும் ஜோதி யாய்க் காட்சி தந்தான் ஆட்கொண்டான்

அவன் நாவில் நாராயண என்னும் நாமமாய் வந்தமர்ந்தான்

அந்த தூய நாமத்தை பற்றி அவனும் மனதில் வைத்தான்

பின்னே நாராயண , நாராயண என்று கூவி துதிக்க

அக்கணமே அவன் காயத்தினின்று ஜீவன் விடுபட்டு

நாணில் எய்த அம்பை ஒத்து விண்ணோக்கி எழுந்தது

வைகுண்டம் அடைந்தது ஜீவ முக்தி பெற்றது

ஒரு முறையே கூவி அழைத்தாலும் நம்

பாவமெல்லாம் பறக்க நம்மை உய்விப்பான் நாராயணன்

நம்புங்கள் அவன் நாமம் பாடுங்கள் அதையே

வாழ்வில் ஒளி சேர்க்க நமை நாம் அறிந்திட .

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (26-Dec-14, 2:55 pm)
பார்வை : 152

மேலே