கிங்கிணி கிளிஞ்சல்
புரியாத வார்த்தையொண்ணு புகழ்தேடி
புதுயுகமொண்ணு படைக்குது
வெத்துபதருக்கு விவேகமெங்கே
வெட்கித்தலை குனிந்தும் விடவில்லை ....
சீக்காழி வெகுமதியும் சாக்காடு போகுது
விற்காதவிடலைக்கும் விதியெழுத்தாகுது
வீழ்ந்துகெட்ட குடிசைக்கும் விலைகோடியுண்டு
வாழ்ந்திட்ட இடமது வற்றாத வளமாகின் ......
தாழ்ந்ததுபோதும் தன்னிலையோடு தட்டியெழு
சுருங்கபுரிந்திடினும் விஸ்தார விளக்கம்கேள்
ஆயிரம் அர்த்தம் அவைக்கு இரண்டு
அச்சுறுத்தலில் அடைவதோ ஆயிரத்து நான்கு .....
செய்யாத செலவுக்கு விலையொருகேடு
செத்துபார்த்திடலாம் கற்பனைகோட்டில்
விண்தேடி போனாலும் மண்தேடும்னாள் விரைவில்
கதிர்கனிந்து கனியாக களத்துமேட்டில்..