விடுமுறை நாட்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
விடுமுறையின் நாட்களதில்
விரதமதை துரத்திவிட்டு
சிறையில்வைத்த யிருநாட்கள்
சிறகடித்துப் பறக்குதடி..!
அடிமைகொண்ட ஐந்துநாட்கள்
அவசரத்தின் விதிமுறைகள்
தெம்புகொண்டு கடந்துவந்ததோ
தேக்கிவைத்த ஆசைகளாய்..!
இயந்திரங்கள் ஒய்வுகொண்டு
இதயமட்டும் இன்பம்கொள்ளும்
விடுமுறையின் சொந்தமென்று
விளையாடும் பிள்ளைகளே...!
கோபமெனும் கொடியவனும்
குழந்தைகளின் குறும்புகளால்
புனசிரிப்பாய் தான்மறைவான்
பொழுதுசாயும் ஆதவன்போல்..!
கூடியுண்ணும் விருந்துகளும்
கொஞ்சிப்பேசும் மருந்துகளும்
காளையுன்னை அடக்கிவிடும்
கட்டிபோட்ட யானையைபோல்..!
அமைதியில்லா குடும்பவாழ்வு
அன்புயென்னும் உயிரூட்ட
கரும்புதரும் இனிமைப்போல
காப்பாற்றும் இருநாட்கள்..!