வாழ்வை அழித்த ஆயுதமே

தாமதமாக வந்த பூதமே -என்
வாழ்க்கையை விரைவாக
அழித்துக் கொண்டதே .....

அன்னையவளின் அரவணைப்பில்
சுகம் கண்ட- எனை
சோகம் வந்து தாக்கியதே

தந்தையவன் தந்த
முத்தமும் அவன் போனபின்னே
உறுதியில்லாமல் நிலை குலைந்து சென்றதே

அக்கா என அழைக்கும் -என்
ஆசைத் தம்பியின்
சின்னக் குறும்புகளும்
நினைவில் மட்டுமே உள்ளதே

பகுத்தறிவு படைத்த
மனிதனே -உன்
அறிவின் அறியாமையினாலா -என்
போன்ற மக்களின் வாழ்வை
தாக்கிச் செல்கிறாய்

நாட்டை அழிக்கத் திட்டமிடும்
தலைவனும் அவன் கூட்டமே
என் குடும்பத்தை நாசமாக்கி -உன்
திட்டத்தை நிறைவேற்றினாலும் -உனக்கு
நிம்மதி கிட்டும் என நினைக்கின்றாயா

அவ்வாறு
நினைப்பாயெனின் அதனை
கனவு என கலைத்துவிடு

நான் குடும்பத்தை பிரிந்து
பரிதவிப்பது போல எத்தனையோ
குடும்பங்கள் பரிதவிக்கின்றன

அனைவரும் உன்னைப் போன்றவர்களை
நிமிசத்துக்கு நிமிஷம்
நிந்தித்துக் கொண்டுதான்
இருப்பார்கள் -நீ செய்த
பாவத்துக்கு அல்ல -தாங்கள்
என்னதான் பாவம் செய்தோம் என்று

உனக்கு ஒரு மன்னிப்பு
அழிக்கிறார்கள்
அனுதாபவமாக -நீ
செய்யும் பாவங்களை மறந்து-அவர்கள்
புண்ணியம் தேடுகின்றனர் -தங்கள்
கவலை மறப்பதற்கு

நீ போட்ட அணுகுண்டு -அந்த
ஒரு குண்டு -எத்தனையோ
மக்களை அழித்த ஆயுதமே -நீ
நாட்டை அழிக்கவில்லை-இவ்
உலகத்தையே அழிக்கின்றதே

என்னை அநாதையாக்கிச்
சென்றதால் -நான் உடைந்த
போகவில்லை -என் மனம் தான்
நொருங்கிப் போனது

இப்போது என்
தாயின் தரிசனமும்
தந்தையின் தைரியமும்-என்
தம்பியின் துவிச்சக்கர வண்டியும் தான்
ஆறுதல் அளிக்கின்றது
எனக்கும் -என்
குடும்பத்தை பிரிந்த என் மனதுக்கும்

எழுதியவர் : keerthana (26-Dec-14, 7:34 pm)
பார்வை : 93

மேலே