உனக்குள்ளே உன்னை தேடு
தரை விழுந்திடும் மழைகள் அழுவதில்லை
கரைந்திடும் பனியும் கவலையுருவதில்லை
கரை கடந்திட துடிக்கும் அலைபோல்
கிடந்து தவிப்பது மனித மனமே !
மண்ணில் முளைக்கும்
யாவையும் பிறர்க்காக
இம்மண் உண்ணும்
மனித உடல்கள் மட்டும் தமக்காக
விந்தை வாழ்க்கையின் சிந்தை !
பஞ்ச பூதமும் மிதக்கிறது-அதில்
கெஞ்சி வாழும் மனித குலம் குதிக்கிறது
அஞ்சி வாழா விட்டாலும்
மிஞ்சிடாது வாழ்ந்தால்
பஞ்சபூதமும் பொறுக்கும் !
எனக்கேன் கஷ்டமென
இனம்புரியாது தவிக்கும் மனிதா
உன்னால் எவர்க்கேனும் நஷ்டமோ !
எண்ணினால் புரியும் நன்று !