கவிஞன்

எந்த நம்பிக்கையில்

பின்னுகின்றன சிலந்திகள்

இரை
சேகரிக்கின்றன எறும்புகள்

வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் ஜனங்கள்

பெய்யும் மழைக்கேற்ப
விளையும் நிலம்

கவிஞன் சாம்பல் கரைக்க
கங்கையும் காணாது குமரியும் போதாது

எழுதியவர் : விக்கி (27-Dec-14, 3:31 pm)
Tanglish : kavingan
பார்வை : 70

மேலே