உறங்கப்போகிறேன் இப்பயணத்தில்

கடைசியாக கிடைத்துவிட்டது இருக்கை
நல்ல வேலை முதியோர் இல்லை
குருதி உறைக்க குரூரத் தோல் ஏறி
குளிர் காற்று உடைந்த கண்ணாடி வழியே

தூர இருக்கையில் எவனோ ஒருவனின் பீடி
நடுங்கும் குளிரில் நாசியை கரிக்கிறது
தொங்கி கிடக்கும் தலைகளின் பிம்பத்தை
காட்டி மறைகிறது எதிர் வாகன விளக்கொளி

உலகின் கரியை குலைத்து பூசிய இரவில்
விண்மீன் செதில் உதிர்க்கும் யாமத்தில்
பனியை உமிழும் மேகத்தின் ஊடே
எங்கோ சுணாம்பாய் கரைகிறது நிலா

ஆயிரம் முறை பேசியும் அலுக்காத வார்த்தையுடன்
ஆங்கங்கே காமம் கலந்த நகைச்சுவையுடன்
எத்தனை இரவுகளை களித்திருப்பர்
இந்த ஓட்டுனரும் நடத்துனரும்

இருக்கிறாகள் இவர்கள் என்று இமைகள் சொக்க
இசைக்கிறேன் என இளையராஜா இழுக்க
விளிக்கயில் வீடு வந்துவிடுமென
உறங்கப்போகிறேன் இப்பயணத்தில்

எழுதியவர் : (28-Dec-14, 2:25 am)
சேர்த்தது : ரவிசங்கர்
பார்வை : 83

மேலே