நா ஆத்தங்கரைக்கு போன புள்ள
அழுக்கு துனி மூட்ட கட்டி
அத்தங்கரைக்கு போனேன் புள்ள
முதுகுல சுமந்த பாரம் கமிதா
நெஞ்சுதா புள்ள கெடந்து தவிக்குது
வண்டி சத்தம் கேட்டதும்
கென்டை மீணும் எட்டி பாக்குது
நீ இல்லாம கால வெச்சதும்
கூடி வந்து கடிக்குது
சலவ செய்ய சட்ட ஒன்னு எடுத்த
சன்டியராட்ட வந்து என் மனச கொன்னு தின்ன
தோழ் சாயர இடத்துல படிஞ்சுருக்கு
உன் கண்மை
அத நனைக்க போகையில
உதிருது புள்ள ஏ கண் இமை
சட்ட பட்டனுல சுத்தி இருக்கு உன் முடி
அத எடுக்கையில நரம்பு சுருன்டுபோனதடி
நா வாங்கி தந்த மல்லிகை வாசமும்
நீ வெச்சு வந்த முல்லை வாசமும்
நீ தொட்ட இடமெல்லா வீசுது புள்ள
கரையோரம் ஏ முச்சுல கலக்குது மெல்ல
கரச்சு புட்டேன் அம்புட்டையும் ஆத்துல
மனசு கேக்கல
நீச்சலும் கத்துக்கல
குதுச்சுட்ட உள்ள
கரஞ்சு போன அம்புட்டையும்
எடுத்து வாரேன் புள்ள
நீயோ பிரிஞ்சிருக்க
என்ன என்னதா பன்ன சொல்ல
பைத்தியம் பிடிச்சு அலையுர இங்க
சீக்கிரம் வா புள்ள
ஏ பொனத்தவாது பாக்க