மஞ்சள் மஞ்சனம்

மஞ்சட்காணியில்
சூர்யகாந்தி மஞ்சள்
- அக்காந்தி மேற்கு நோக்குகையில்
சூரியன் மஞ்சள்
- சூரியன் மறைகையில்
வானம் மஞ்சள்
- வானம் இருள்கையில்
நிலவு மஞ்சள்
- நிலவு தேய்கையில்
வீட்டு விளக்குகள் மஞ்சள்
- விளக்குகள் அணைகையில்
அவ்விளக்குகள் அணைகையில்
மஞ்சனின் மஞ்சு
மஞ்சரி நிறைந்த அந்த
மஞ்சம் மீதுள்ள
மஞ்ஞை போலிருக்கும்
மஞ்சள் மீது
விழும் பொழுது -
அப்பொழுது
பொழுது விடிந்து - அவள்
மஞ்சள் மஞ்சனமாடுகிறாள் !

எழுதியவர் : ரீவா (14-Apr-11, 3:10 am)
சேர்த்தது : Reeva
பார்வை : 436

மேலே