தன்னம்பிக்கை கட்டுரை

முடியும் என்றால் முடியும் ............
முடியாது என்றால் முடியாது.........

இது தான் தன்னம்பிக்கையின் தாரக மந்திரம்...........

பொதுவாகவே இதன் அர்த்தத்தை யாரும் சரியாக புரிந்து கொள்ளுவதில்லை .....

முடியும் என்றால் முடியுமா ..................
அப்போ என்னால் தீக்குள் விரலை விட முடியுமா....அப்பொழுது எனக்கு ஒன்றும் ஆகாதா .............
தலையால் நடக்க முடியுமா........நீங்கள் தான் முடியும் என்று சொல்லுகிறீர்களே ...........

இதற்கு அர்த்தம் இதுவல்ல............
தன்னம்பிகையோடு ஒரு செயலை செய்வதாக நீங்கள் முடிவு எடுத்து விட்டால் அதற்கு முதலில் பகுத்தறிவுக்கும் விதிக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள் ..........


நான் படித்த கதை ஒன்றை கூறுகிறேன்

ஒரு ஜென்துறவி ஒருவரிடம் அவரது சீடர் ஒருவர் பகுத்தறிவுக்கும் விதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டானாம் .உடனே அவர் சரி உன்னுடைய வலது காலைத் தூக்கி ஒற்றை காலில் நில் என்று கூறினார்.அவனும் சரி என்று அவ்வாறே நின்றான்.பின் மறுபடியும் அந்த துறவி அவனைப் பார்த்து இப்பொழுது உன்னுடைய இடது காலையும் தூக்கு என்றாராம் .உடனே அவன் அது எப்படி முடியும் முடியாதே என்றானாம்.உடனே அந்த துறவி அவனிடம் நான் வலது காலைத் தூக்கு என்றதும் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே செய்தாய் அல்லவா இது உன்னுடைய பகுத்தறிவு .பின்னர் இடது காலைத் தூக்கு என்றதும் அது முடியாது என்று புரிந்து கொண்டாயல்லவா இது தான் விதி (மாற்ற முடியாத சில நியதிகள் ).


நாம் ஒன்றை அடைய அதிகமாக ஆசைப் படவேண்டும்.......
அது கண்டிப்பாக நடந்தே தீரும் என்று நம்ப வேண்டும் .........
பின்னர் அதற்க்கான சாத்தியக்கூறுகளை அலசி ஆராய வேண்டும்........
சரியான வரையறை தயார் செய்ய வேண்டும்.....
பின்னர் முறையாக செயல்படுத்த வேண்டும் .....

இவற்றை எல்லாம் நமக்கு பெற்று தருவது தன்னம்பிக்கை ஒன்று மட்டுமே.............
முதலில் உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் ....தாழ்வு மனப்பான்மையை மாற்றுங்கள்.......
உங்கள் தோற்றம்,நிறம் ,நிலை,வீடு ,வசதி ,படிப்பு ,இன்னும் பலவற்றில் நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும்
தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே நீங்கள் முன்னேற முடியும்............

எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் இப்படி சொல்லிக்கொள்ளுங்கள்

என்னால் முடியும் ....!
கண்டிப்பாக என்னால் முடியும்....!



ie,,,

I CAN !
I WILL!
I MUST!

எழுதியவர் : kannama (28-Dec-14, 10:11 pm)
பார்வை : 1272

மேலே