என் விதியா இறைவன் சதியா
(எது கற்பனை அல்ல வேற ஒரு மனிதனின் வாழ்க்கை அல்ல என்னோட இன்னொரு வாழக்கை தேக்கி வைத்த கண்ணீர் எழுத்தில் வந்து எழுதியது )
தோழா
என்னை தொலைத்து
விட்டேன்
உயிர் இருந்தும்
உடல் இருந்தும்
அசைவே இல்லாமல் இருக்குறேன்
திறமையில் உலகம்
திறக்க பார்க்கிறேன்
நிம்மதி எங்கே
பார்க்கிறேன் கேட்கிறேன்
நாடோடியா நான் போகவா
நிம்மதிக்குநான் ஏங்கவா
கவலையில் நான் தூங்கவா
என் கண்ணீர்
வெளியில் வர அசிங்க பட்டு
கண்ணுக்குள் கல்லறை கட்டும்
மனதை பட்டாம் பூச்சியாய்
பறக்க ஆசைப்பட்டேன்
பட்டு போனதடி
அழுகையில் கரைந்தேன்
வார்த்தையின் வலி உணர்ந்தேன்
என் சோகத்தால் தேய்ந்தேன்
என் கதி என்ன
சொல்ல வார்த்தை இல்லை
என் மகிழ்ச்சியின்
எல்லை கண்டது இல்லை
நீழல் கூட எறிகிறது
வார்த்தை வெயிலில்
வார்த்தை வர மறுக்கிறது
வாயின் வாயிலில்
பாதை இருந்தும் ஓட முடியவில்லை
நாட்கள் இருந்தும் கடக்க முடியவில்லை
புண்ணகை இருந்தும் பறிக்க முடியவில்லை
சோகம் வந்து காது கடிக்க
சந்தோஷ செய்தி கேட்க
வில்லையோ